இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மலையாளத்தில் பிரித்விராஜ் பிஜுமேனன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம் தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பவன் கல்யாண் ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க சாய்பல்லவி நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் கொஞ்ச நேரமே வந்துபோகும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவி மறுத்துவிட்டதால் பின்னர் நித்யா மேனன் ஒப்பந்தம் ஆனார்.
கதைப்படி போலீஸ் அதிகாரியின் மனைவி என்றாலும், நியாயத்துக்காக போராடும் நக்ஸலைட்டாகத்தான் அந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதேசமயம் இந்தப்படத்தில் நடித்து முடித்துவிட்ட நித்யா மேனன் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “இந்தப்படத்தில் எனக்கு மொத்தமே நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பு தான் இருந்தது.. ஆனாலும் ஒரிஜினலில் இருந்த கதாபாத்திரத்தில் இருந்து நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு படத்தில் அதிக நேரம் வரும் விதமாக முக்கியத்துவம் கொடுத்து எனது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.