பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

துல்கர் சல்மான் கிரிமினலாகவும் அதிரடி போலீசாகவும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள இரண்டு படங்கள் இந்த மாதமும் அடுத்த மாதமும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
கேரளாவில் எண்பதுகளில் பிரசித்தி பெற்ற கிரிமினல் தான் சுகுமார குருப். இப்போதும் கூட தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கும் இவனது வாழ்கையை மையமாக வைத்து 'குருப்' என்கிற பெயரிலேயே உருவாகியுள்ள படத்தில் ஹீரோவாக, சுகுமார குருப் கேரக்டரில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் நவ-12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஆனால் அதற்கு அப்படியே நேர்மாறாக சல்யூட் என்கிற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் துல்கர் சல்மான். இது அவர் நடித்துள்ள முதல் போலீஸ் படம்.. தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் டிச-17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.