சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் |
சைரா நரசிம ரெட்டி படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிப்பில் அடுத்த படம் வெளியாவதற்கு தான் இடைவெளி ஏற்பட்டுள்ளதே தவிர, அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை கணிசமாகத்தான் இருக்கிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்ட சிரஞ்சீவி, தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் மலையாள லூசிபர் ரீமேக்காக உருவாகும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கான போலோ சங்கர் படத்திலும் நடிக்கிறார். இந்தநிலையில் அவரது 154வது படமும் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்தப்படத்தை பாபி என்பவர் இயக்குகிறார். இந்த படஹ்தின் துவக்க விழா பூஜையில் கலந்துகொண்ட இயக்குனர் வி.வி,விநாயக் கிளாப் அடித்து துவங்கி வைக்க, கேமராவை இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஸ்விட்ச் ஆன் பண்ண, முதல் காட்சியை ராகவேந்திரா ராவ் இயக்கினார். இந்தப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.