தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் |
படம் : ரன்
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : மாதவன், மீரா ஜாஸ்மின், அதுல் குல்கர்னி, ரகுவரன், விவேக்
இயக்கம் : லிங்குசாமி
தயாரிப்பு : ஏ.எம்.ரத்னம்
ஆனந்தம் என்ற குடும்ப கதையை இயக்கிய லிங்குசாமி, அடுத்த படத்தில் ரன் என, வேகமெடுத்தார். படத்தின் கதையா... அதாவது, மாமா ரகுவரன் வீட்டிற்கு செல்லும் மாதவனுக்கு, அங்கிருக்கும் பிரபல ரவுடியான அதுல் குல்கர்னியின் தங்கை மீரா ஜாஸ்மின் மீது காதல் மலர்கிறது. ரவுடிகளை துவம்சம் செய்து, காதலியை கரம் பிடிக்கிறார். அவ்வளவு தான்!
இந்த சின்ன கதைக்கு, பரபரப்பான திரைக்கதை அமைத்து, டாப் கியரில் இயக்கியிருந்தார், லிங்குசாமி. படத்தின் வெற்றிக்கு காரணம், இயக்குனர் மட்டுமே என்பதை, அழுத்தம் திருத்தமாக நிரூபித்தார். 'ஆமாம்... அடி வாங்கத் தான், திருச்சியில இருந்து வந்துருக்கேன்' என, சாக்லேட் பாயாக இருக்கும் மாதவன், ஷட்டரை இறக்கும்போது, ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அந்த சுரங்கப் பாதை சண்டை, மிக பிரமாதமாக அமைந்திருந்தது. தமிழ் சினிமாவில், சிறந்த சண்டை காட்சிக்களை பட்டியிலிட்டால், 10க்குள் ஒன்றாக, ரன் இருக்கும்.
அதுல் குல்கர்னியில் வில்லத்தனம் ரசிக்கப்பட்டது. லிங்குசாமி, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு டச் வைத்திருந்தார். மீரா ஜான்மினை, மாதவன் அழைத்துச் செல்லும்போது குறுக்கிடும், உடல் ஊனமுற்ற அடியாள் முதற்கொண்டு, அனைத்து கதாபாத்திரங்களும் நச்சென்று வார்க்கப்பட்டிருந்தன.
இப்படத்தில் இடம்பெற்ற விவேக் காமெடி வெகுவாக ரசிக்கப்பட்டது. 'சிவா எங்கடா இருக்க...' என புலம்பும்போதெல்லாம், திரையரங்கில் சிரிப்பு சத்தம் பலமாக எழுந்தது. வித்யாசாகரின் இசையில், 'காதல் பிசாசே, இச்சுத் தா இச்சுத் தா, மின்சாரம் என் மீது பாய்கின்றதே, வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டேன்...' உள்ளிட்ட பாடல்கள், தமிழகம் எங்கும் எதிரொலித்தன. படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
தியேட்டரில் செம ஓட்டம் ஓடியது, ரன்!