தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் |
படம் : வில்லன்
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : அஜித், மீனா, கிரண், பெப்சி விஜயன், ரமேஷ் கண்ணா
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு : நிக் ஆர்ட்ஸ்
கடந்த, 2002 தீபாவளிக்கு, விஜய் நடித்த, பகவதி; அஜித் நடித்த வில்லன் ஆகிய இரு படங்களும் மோதின. வில்லன், பெரும் வெற்றி பெற்றார்! அஜித்துடன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்த முதல் படம் இது தான். இதற்கடுத்து, வரலாறு படத்தில் இணைந்தது.
'ரஜினி, கமல் இணைந்த கலவை தான், அஜித். அதற்கு ஏற்றார்போல கதையை உருவாக்கினேன்' என்றார், வில்லன் படத்தின் கதையாசிரியர் யூகி சேது. பஸ் நடத்துனராக இருக்கும் அஜித், வாய்ப்பு கிடைக்கும்போது கொள்ளைக்காரனாக மாறுகிறார் என்ற, ஆதி காலத்து, 'ராபின் ஹூட்' கதை தான். அதற்கு ஒரு சோகமான பின்னணியும், 'பவர்புல்' வில்லனையும் இணைந்து, திரைக்கதை வடிவமைத்திருந்தார், கே.எஸ்.ரவிக்குமார்.
இப்படத்தை காமெடி ஆக் ஷன் வகையில் சேர்க்கலாம். அஜித், ரமேஷ்கண்ணா, கருணாஸ் கூட்டணி, காமெடியில் பட்டையைக் கிளப்பியது. சிவா என்ற பஸ் நடத்துனராகவும், விஷ்ணு என்ற மாற்றுத்திறனாளியாகவும், அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மாற்றுத்திறனாளி விஷ்ணுவாக, நம் பரிதாபத்தை அள்ளியிருந்தார் அஜித்.
கவர்ச்சிக்கு கிரண், கொள்ளைக்கு உதவ மீனா என, இரட்டை கதாநாயகியர். வித்யாசாகர் இசையில், 'பதினெட்டு வயசில், ஒரே மணம், அடிச்சா நெத்தியடிய, ஆடியில காத்தடிச்சா, ஹலோ ஹலோ, தப்புத் தண்டா...' பாடல்கள் ரசிக்கச் செய்தன.
படம், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, ஹிந்தியில், ஜீத் என்ற பெயரில், டப்பிங் செய்யப்பட்டது. வில்லன் என்ற தலைப்பில், ராஜசேகர் நடிப்பில், தெலுங்கில், 'ரீமேக்' செய்யப்பட்டது. வில்லன் என்ற பட தலைப்பு மீது அப்படி என்ன நாட்டமோ... இதுவரை, எட்டு மொழிகளில், 10 படங்களுக்கு, அந்த பெயரைச் சூட்டியுள்ளனர்.
வில்லன் வெற்றிப் பெற்றால் ஹீரோ; அவ்வளவு தான்!