சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
படம் : பம்மல் கே சம்பந்தம்
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : கமல், சிம்ரன், அப்பாஸ், சினேகா
இயக்கம் : மவுலி
தயாரிப்பு : பி.எல்.தேனப்பன்
கமல் பரிசார்த்த முயற்சிகளுக்கு இடையில், குறிப்பிட்ட இடைவெளியில் நகைச்சுவை படம் கொடுத்து, தன் வெற்றி நாயகன் என்ற அடையாளத்தையும் தக்கவைத்துக் கொள்வார். அவ்வகையில், 2002ல் மவுலியின் திரைக்கதை, இயக்கத்தில் வெளியான பம்மல் கே சம்பந்தம் படம், காமெடியில் பட்டையை கிளப்பியது. இது, எந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பது குறித்து, அப்போது பட்டிமன்றமே நடந்தது.
படத்தின் பலமே, கமல் பேசும், சென்னை மொழி தான். பழமொழி சொன்ன அனுபவிக்கணும்; ஆராயக் கூடாது உட்பட, படம் முழுதும் கிரேசி மோகனின் வசனம் கலகலவென இருந்தது. தலைப்பில் இடம்பெற்ற, கே என்பது என்ன? என்ற ரகசியம் படம் வெளிவரும் வரை காக்கப்பட்டது.
பம்மல் கல்யாண சம்பந்தம் என்ற கமலுக்கு, திருமணம் என்றாலே வேப்பங்காயாய் கசக்கும். எந்த அளவிற்கு என்றால், தன் பெயரில் இருக்கும், கல்யாணம் என்ற வார்த்தையை கூட சொல்லாமல், கே என்று மட்டும் கூறுவார். இதே குணநலன் உடைய மருத்துவர் சிம்ரன், காயமடைந்த கமலின் வயிற்றில் சிகிச்சை மேற்கொள்ளும்போது, தவறுதலாக, தன் கைகடிகாரத்தையும் உள்ளே வைத்து, தைத்துவிடுவார். அதை மீண்டும் எடுப்பதற்காக சிம்ரன், கமலை நோக்கிச் செல்ல, அவர் விலக... என, ஒரே காமெடி களேபரம் தான், படம் முழுதும். அக்காலகட்டத்தில் கமலும், சிம்ரனும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
பட துவக்க விழா அழைப்பிதழில், தேவயானியின் படம் இடம் பெற்றிருந்தது. திடீரென அவர் காதல் திருமணம் செய்து, தேனிலவுக்கு சென்றதால், அந்த கதாபாத்திரத்தில், சினேகா நடித்தார். தேவா இசையில், பாடல்கள் ரசிக்க செய்தன. இப்படம் தெலுங்கில், பிரம்மச்சாரி என, டப்பிங் செய்யப்பட்டது. ஹிந்தியில், கம்பக்த் இஷ்க் என, ரீமேக் செய்யப்பட்டது.
பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்து, டென்ஷன் குறைக்கலாம்!