லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
படம் : ஜெமினி
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : விக்ரம், கிரண், கலாபவன் மணி, முரளி, வினுசக்ரவர்த்தி
இயக்கம் : சரண்
தயாரிப்பு : ஏ.வி.எம்.,
'ஓ போடு' என, தமிழகம் எங்கும் பட்டையைக் கிளப்பிய படம், ஜெமினி. ரவுடிகளான, 'வெள்ளை' ரவி, சேரா ஆகியோர், ஒரு போலீஸ் அதிகாரியின் ஆதரவுடன், தங்களை சீர்திருத்திக் கொண்டனர். இந்த சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட சரண், அதை அஜித் நடிப்பில் உருவாக்க திட்டமிட்டார்.
ஏறுமுகம் என்ற தலைப்பில், அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அஜித், படத்தில் இருந்து விலகினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 'இனி அஜித்துடன் இணைய மாட்டேன்' என அறிவிக்கும் அளவிற்கு விரக்தி அடைந்தார், சரண். ஆனாலும், சினிமா அரசியலின் படி அட்டகாசம், அசல் படங்களில், அந்த ஜோடி இணைந்தது.
ஏறுமுகம் படத்தில் இருந்து அஜித் விலகி நிலையில், அதே கதையை ஜெமினி என்ற பெயரில், விக்ரம் நடிப்பில், சரண் உருவாக்கினார். கடந்த, 1997ல் வெளியான மின்சார கனவு படத்திற்கு பின், ஐந்தாண்டு இடைவெளிக்கு பின், ஏ.வி.எம்., நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
ரவுடிகளான விக்ரமும், கலாபவன் மணியும் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். காவல் துறை அதிகாரியான முரளி, அவர்களை சீர்திருத்த முயற்சிக்கிறார். அவரின் முயற்சி வெற்றி பெற்றதா என்பது தான், சுவாரஸ்யமான திரைக்கதை.
கிரண், இப்படத்தில் அறிமுகமானார். விக்ரம் - கிரண் காதல் காட்சிகள் ரசிக்கச் செய்தன. கலாபவன் மணி உடல்மொழியுடன், 'மிமிக்ரி' செய்து, வித்தியாசமாக வில்லத்தனம் செய்திருந்தார். காவல் துறை அதிகாரி சிங்கபெருமாளாக, முரளி தன் அனுபவ நடிப்பை காட்டியிருந்தார்.
பரத்வாஜ் இசையில், 'ஓ போடு, பெண்ணொருத்தி, தீவானா, காதல் என்பதா, கட்ட கட்ட...' பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. ஜெமினி ராசியில் வசூல் மழை கொட்டியது!