துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை பரவும்போது பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு 25 கோடியை அள்ளிக் கொடுத்தார். இதுதவிர மும்பை மாநகராட்சி, மும்பை போலீசுக்கும் தலா 2 கோடி வழங்கினார்.
தற்போது 2வது அலை பரவும்போது முதல் ஆளாக ஒரு கோடி கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இந்த தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கவுதம் கம்பீர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு இந்த நிதியை வழங்கிய அக்ஷய் குமாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அக்ஷய்குமார் “என்னால் உதவ முடிந்ததற்கு நன்றி. இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.