சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
மோகன்லால் நடித்த படங்கள் மலையாளத்தில் வெளியாகும்போது மற்ற மொழி நடிகர்களும் சரி, இயக்குனர்களும் சரி.. முக்கியமான சில பேர் அதன் மீது தங்களது கவனத்தை திருப்புவது வழக்கம் தான். காரணம் அந்தப்படம் ஹிட்டானால் அதன் ரீமேக்கை கைப்பற்றி விடலாம் என்பதுதான்.. அந்தவகையில் சமீபத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான 'ஒப்பம்' படம் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருப்பதால் இந்தியை சேர்த்து மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் ரைட்ஸுக்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது..
த்ரிஷ்யம் போல அனைவரும் டக்கென ஏற்று நடித்துவிடக்கூடிய ஒரு கேரக்டர் அல்ல, ஒப்பம் படத்தில் மோகன்லால் ஏற்று நடித்துள்ளது.. அதில் பார்வையற்றவராக மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மோகன்லால். தமிழில் கமல் நடிப்பார் என சொல்லப்படுகிறது.. அவர் அதை அசால்ட்டாக செய்துவிடுவார் என்று தெரியும்.. ஆனால் இந்தியில் இந்த கேரக்டரை யார் ஏற்று நடித்தாலும் அது சவாலாகவே இருக்கும்.. அந்தவகையில் அக்சய் குமாரும் அமீர்கானும் இந்தப்படத்தை பார்த்துவிட்டு இதன் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது..
இயக்குனர் பிரியதர்ஷன் பல வருடங்களாக இந்தியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டு இருப்பதால் அவரே இதன் ரீமேக்கை இயக்கலாம் என்றும், மேலும் அக்சய் குமாரை வைத்து ஏற்கனவே அவர் படங்களை இயக்கி உள்ளதால் மீண்டும் அவருடன் கூட்டணி சேர அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லபடுகிறது. அதேசமயம் ஆமீர்கான் இந்தப்படத்தில் அதிக விருப்பம் காட்டி, நடிக்க முன்வந்தால், இதுவரை அமீருடன் பணிபுரிந்திராத, ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என காத்திருக்கும் பிரியதர்ஷன் அமீர்கானைத்தான் டிக் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.