ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் 2022ல் திரைக்கு வந்த படம் சாம்ராட் பிரித்விராஜ். இதில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மனுசி சில்லார். 26 வயதாகும் இவர் 56 வயதாகும் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பதால் பாலிவுட்டில் கிண்டல் கேலி செய்தார்கள். இந்த நிலையில் தற்போது தான் அளித்த ஒரு பேட்டியில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் மனுஷி சில்லார் .
அவர் கூறுகையில், ‛‛அக்ஷய்குமாருக்கும் எனக்குமிடையே 30 வயது வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்து பலரும் என்னை கிண்டல் கேலி செய்து வருகிறார்கள். என்னைப் போன்று வளர்ந்து வரும் ஒரு நடிகைக்கு அக்ஷய் குமார் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாராவது அந்த வாய்ப்பை விடுவார்களா? அதோடு அவருடன் நடித்தபோது எந்த வயது வித்தியாசமும் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவரது படப்பிடிப்பில் இளைஞர்களைப் போன்று ஜாலியாகவே காணப்பட்டார்.
அவருடன் நடித்தது எந்த வகையிலும் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. இப்படி என்னைப்போன்று வளர்ந்து வரும் பல இளம் நடிகைகளும், சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கத்தான் செய்கிறார்கள். அதனால் கிண்டல் கேலி செய்யும் அளவுக்கு இதில் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று தன்னை விமர்சித்தவர்களுக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் மனுசி சில்லார்.