சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தென்னிந்திய இயக்குனர்கள் பாலிவுட்டில் சென்று கால் பதித்தாலும் அங்கே நிலைத்து நிற்பது ரொம்பவே கடினம். ஆனால் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதுவரை ஹிந்தியில் 27 படங்களை இயக்கியுள்ள அவர் கடந்த 2009, 2010 என இரண்டு வருடங்களில் மட்டும் தொடர்ந்து ஐந்து ஹிந்தி படங்களை அவர் இயக்கி உள்ளார். கடந்த 2021ல் 'ஹங்குமா 2' படத்தை இயக்கிய பிரியதர்ஷன் மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடிக்கிறார்.
ஏற்கனவே பாஹம் பாக், ஹேரா பெரி, கரம் மசாலா என பிரியதர்ஷன் டைரக்ஷனில் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அக்ஷய் குமார் கடந்த 2010ல் அவரது இயக்கத்தில் கட்டா மீதா என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது 14 வருடங்கள் கழித்து மீண்டும் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிக்க இருக்கிறார். மேஜிக்கை பின்னணியாக கொண்டு காமெடி கலந்த ஹாரர் பேண்டஸி படமாக இது உருவாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இறங்கு முகத்தில் இருக்கும் அக்ஷய் குமாரின் மார்க்கெட் பிரியதர்ஷன் படம் மூலமாக மீண்டும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.