பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாலிவுட் திரையுலகில், ஷாரூக் கான் - தீபிகா படுகோனேவிற்கும் இடையே சிறந்த நட்புறவு நிலவி வந்தது உண்மையே, ஆனால், அந்த நிலை தற்போது இல்லை என்பதே உண்மை. ஷாரூக் கான் நடிப்பில் உருவாகியுள்ள தில்வாலே படம், டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது. என் படத்துடன் யாராவது போட்டிக்கு வர தயாரா என்று டுவிட்டரில் ஜாலியாக, ஷாரூக் பதிவிட்டிருந்தார். ஷாரூக்கின் இந்த டுவீட், மற்றவர்களுக்கு எப்படி தெரிந்ததோ இல்லையோ, தீபிகா படுகோனிற்கு பெரும் மானப்பிரச்னையாக அமைந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து, தீபிகா நடிப்பில் உருவாகியுள்ள பஜிராவ் மஸ்தானி படத்தின் ஸ்டில்லை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அவரின் சவாலை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளார். அதோடு நின்றுவிடாது, பஜிராவ் மஸ்தானி படமும், டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.