10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சமீபத்தில் தொடங்கின. இதில் பாலிவுட்டில் இருந்து, தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். அதேசமயம் முதல் நாள் நிகழ்வின் போது நடிகர் ரஜினிகாந்த் தங்களுடன் வந்த தங்கள் வீட்டு பணிப்பெண்ணை புகைப்படம் எடுக்கும் போது ஒதுங்கி நிற்கச் சொல்லி சைகை காட்டினார் என ஒரு வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. சிலர் இது குறித்து கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர்.
இதை தொடர்ந்து இரண்டாவது நாள் கொண்டாட்டங்களில் பாலிவுட் மும்மூர்த்திகளான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோர் ஒன்றாக மேடையேறி ஆர்ஆர்ஆர் படத்தில் புகழ்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஒன்றாக இணைந்து நடனம் ஆடினர். அந்த சமயத்தில் படத்தில் நிஜமாகவே ஆடிய ராம்சரண் கூட இருந்ததால் நன்றாக இருக்கும் நினைத்த ஷாருக்கான் தன்னிடமிருந்து மைக்கில் ராம்சரண் எங்கப்பா இருக்கிற, மேடைக்கு வாங்க என்று அழைத்த போது அவரை இட்லி சாப்பிடுபவர் எனக் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
பொதுவாக தென்னிந்தியாவை சேர்ந்தவர்களை மதராஸி, இல்லை என்றால் இட்லி, சாம்பார் சாப்பிடுபவர்கள் என்பது போன்றே கேலியுடன் வடநாட்டவர் குறிப்பிடுவது வழக்கம் தான். ஆனால் ஷாருக்கான் போன்ற ஒரு நடிகர் தென்னிந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ராம்சரணை இப்படி பொது மேடையில் கிண்டலாக அழைத்ததை அவரது ரசிகர்கள் ரசிக்கவில்லை. ராம் சரணின் பர்சனல் மேக்கப்மேன் முதற்கொண்டு பலரும் ஷாருக்கானின் இந்த செயலுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.