''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் கேரளாவையும் தாண்டி தமிழ்நாட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இங்கே தமிழ் படங்களை காட்டிலும் தியேட்டர்களில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. படம் பார்த்த பிரபலங்கள் அனைவருமே இந்த படத்தை மனம் விட்டு பாராட்டி வருகின்றனர். குறிப்பாக எப்போதுமே தென்னிந்திய படங்களை அதிலும் தமிழ் மற்றும் மலையாள படங்களை ரசித்து சிலாகித்து பாராட்டி வரும் பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தை பார்த்துவிட்டு பிரமிப்பு விலகாமல் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “சிம்பிளான அதே சமயம் அசாதாரணமான ஒரு சினிமா படைப்பு. இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் மேக்கிங்கை விட ரொம்பவே சிறப்பாக இருக்கிறது. அந்த அளவிற்கு தன்னம்பிக்கை. அந்த அளவிற்கு சாத்தியமில்லாத கதை சொல்லும் முறை.. இந்த ஐடியாவை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி எப்படி விற்க முடிந்தது என நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். ஹிந்தியில் இது போன்ற ஐடியாக்களை ரீமேக்கில் மட்டும் தான் செய்கிறார்கள். உண்மையிலேயே புத்திசாலித்தனமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து வரும் மலையாள படங்களின் பின்னால் வெகு தொலைவில் ஹிந்தி சினிமா இருக்கிறது” என்று கூறியுள்ளார்.