வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே தான் தாய்மை அடைந்திருப்பதாக கணவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளின் ஆடைகளைப் பகிர்ந்து 'செப்டம்பர் 2024' என்று குறிப்பிட்டு தீபிகா, ரன்வீர் எனப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதற்குள் லைக் செய்துள்ளனர். சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய அணியின் பாட்மின்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே. கொங்கணியைத் தாய் மொழியாகக் கொண்ட தீபிகா டென்மார்க்கில் பிறந்து பெங்களூருவில் படித்து வளர்ந்தவர். சோப் விளம்பரப் படத்தில் நடித்து பிரபலமடைந்த தீபிகா பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
முதலில் கன்னடப் படத்தில் அறிமுகமாகி பின் 2007ம் ஆண்டு 'ஓம் சாந்தி ஓம்' ஹிந்திப் படத்தில் நடித்து பிரபலமாகி பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தாய்மை அடைந்துள்ளார்.