கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் |
திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட், திருமணத்திற்குப் பின்பு போட்டோஷுட் போக தாய்மை அடைந்து குழந்தை பெறுவதற்கு முன்பாக 'பிரக்னன்சி' போட்டோஷுட் நடத்துவதும் தற்போது 'பேஷன்' ஆகிவிட்டது. சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கூட இப்படி புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பாலிவுட்டின் பிரபலமான நடிகையான தீபிகா படுகோனே, பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரி மாதம் தீபிகாவின் தாய்மை பற்றி இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் 'கல்கி 2898 ஏடி' பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட தீபிகா கலந்து கொண்டார். அவரது 'பேபி பம்ப்' புகைப்படத்தை எடுக்க பாலிவுட் புகைப்படக் கலைஞர்கள் பெரிதும் பிரயத்தனப்பட்டார்கள்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தீபிகாவின் கர்ப்பகால புகைப்பட போட்டோஷுட் ஒன்றை நடத்தி பல புகைப்படங்களை தீபிகா, ரன்வீர் ஜோடி வெளியிட்டுள்ளது. பல சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த மாதக் கடைசியில் தீபிகாவுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தகவல். இன்ஸ்டாவில் நேற்றிரவு அவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் 50 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளன.