முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் |

மும்பையில் அயூப் கான் ஏற்பாடு செய்த முதல் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு மொழிகளில் இருந்து திரைப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பூனம் தில்லான், போமன் இரானி, யஷ்பால் சர்மா, மேகா ரே, ரவி கோசைன், அனுப் சோனி, ஏக்தா ஜெயின், ராஜேஷ் தெலாங், சையத் அகமது மற்றும் அயூப் கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தர்மாராவ் பாபா அத்ரம் , மாஸ்டர் பீஸ், தி இமாம், தாதா லக்ஷ்மி, நனீரா, அவதாரி, புரமோஷன், ராஜ் கபூர் லூனி ட்யூன்ஸ், பாஸ், அந்தர்நாடு, பிளாக் காபி, எண்ட் இஸ் பிகினிங், டிப்ரஷன், லாஸ்ட் சீன், பிரேக் தி சைலன்ஸ் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன. இதில் டிவி நடிகை மேகா ரேயின் முதல் குறும்படமான ‛மாஸ்டர் பீஸ்' திரைப்படம் தான் அதிகம் பேசப்பட்டன. போட்டோகிராபியின் வாழ்க்கையை மையமாக கொண்ட இப்படம் ஓடிடி தளங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது.
இது பற்றி மேகா ரே கூறுகையில், ‛‛மாஸ்டர் பீஸ் ஓடிடி.,க்காக உருவாக்கப்பட்டாலும், பெரிய திரையில் அதை பார்ப்பதில் மகிழ்ச்சி. இது எனக்கு ஒரு பெருமையான தருணம். இது ஒரு ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞரின் கதை'' என்றார்.