சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 30வது கேரள சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ம் தேதி தொடங்கியது. விழாவை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியான் தொடங்கி வைத்தார். சிலி நாட்டு இயக்குனர் பாப்லோ லாரோ இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடக்க விழாவுக்கு பின்னர் ஆன் மேரி ஜாசிர் இயக்கிய 'பாலஸ்தீன் 36' என்ற படம் திரையிடப்பட்டது. வரும் 19ம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் துருக்கி, வியட்நாம், பாலஸ்தீன், கொரியா, ஸ்பெயின் உள்பட 82 நாடுகளைச் சேர்ந்த 206 படங்கள் 26 பிரிவுகளில் திரையிடப்படுகின்றன.
இந்நிலையில் இந்த விழாவில் 19 படங்களை திரையிட திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து நேற்று திரைப்பட விழா நடைபெறும் வளாகங்கள் முன், ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் திரைப்பட விழா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்பட விழாவில் அரசியல் புகுந்து விட்டதாக பரவலான கருத்து உருவாகி உள்ளது.