ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
துணிச்சலான பேச்சுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விரைவில் வெளியாக உள்ள எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ஆளும் பிஜேபி கட்சியில் உள்ள அவர் ஒரு காங்கிரஸ் கட்சி தலைவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அரசியல் ரீதியாக ஏற்கனவே மிகப்பெரிய சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் விஷாக் நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான புட்டேஜ் படத்தில் கதாநாயகனாக நடித்து கவனம் ஈர்த்தவர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தனக்கு சில நபர்களிடம் இருந்து போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறியுள்ளார் விஷாக் நாயர்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் நான் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால் சில நான் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தயவுசெய்து சம்பந்தப்பட்ட நபர்கள் என் மீது வெறுப்பை காட்டுவதற்கு முன்பாக உங்களுக்கு தகவல் கொடுத்தவர்களிடம் அந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி முதலில் விசாரியுங்கள்” என்று தனது சோசியல் மீடியா பதிவு மூலமாக கூறியுள்ளார்.