என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கடந்த 2010ம் ஆண்டு ஜெய் நடிப்பில் மீரா கதிரவன் இயக்கிய அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் ஒரு டான்சர் வேடத்தில் நடித்தவர் மலையாள நடிகை வித்யா பிரதீப். அதன்பிறகு விருந்தாளி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த இவர், பின்னர் சைவம், பசங்க 2, தடம் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். கடந்த செப்டம்பர் 27ல் சதீஷ் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தனக்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் கர்ப்பிணி ஆகியுள்ள தகவலை புகைப்படத்துடன் அறிவித்திருக்கிறார் வித்யா பிரதீப். அதோடு அவர் இப்படி ஒரு தகவலை வெளியிட்ட பிறகுதான் தனது திருமணம் குறித்த தகவலை வெளியிடாமல் அவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.