சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கடந்த 2012ம் ஆண்டு ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மும்பை நடிகையான இவருக்கு அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கு, ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வந்தவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் 69வது படம், சூர்யாவின் 44 வது படம் மற்றும் ஹிந்தியில் சாகித் கபூருடன் நடிக்கும் படம் என ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடிக்கிறேன். என்றாலும் பல சமயங்களில் அந்த படங்கள் தோல்வி அடைந்து விடுகிறது. ஆனால் படங்களின் தோல்வியை பார்த்து ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் எனது கதாபாத்திரத்தில் 100% நடிப்பை வெளிப்படுத்துகிறேன். அதன் வெளிப்பாடாகத்தான் நடித்த படங்கள் தோல்வி அடைந்தபோதும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து இயக்குனர்கள் எனக்கு பட வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள். இப்போதும் என் கைவசம் ஐந்து மெகா படங்கள் இருப்பதற்கு காரணமே என் திறமை மீது இயக்குனர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்று கூறியிருக்கிறார் பூஜா ஹெக்டே.