'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பின் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் ‛கேம் சேஞ்சர்'. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. தமன் இசையமைக்க, 'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி உள்ளது.
1:31 நிமிடம் ஓடக் கூடிய இந்த டீசரில் ஷங்கர் படத்திற்கே உரிய பிரமாண்ட காட்சிகள், அதிரடி ஆக்ஷன்கள் என டீசர் முழுக்க நிறைந்துள்ளது. ராம் சரண் பல்வேறு விதமான லுக்கில் அசத்தி உள்ளார். அரசியல்வாதிகளை எதிர்த்து இந்த படத்தின் கதை இருக்கும் என தெரிகிறது.
ராம் மாதிரி நல்லவனும் இல்ல, கோபம் வந்தா ராம் மாதிரி கெட்டவனும் இல்ல..., என்னை கணிக்கவே முடியாது மாதிரியான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் டீசர் வெளியாகி உள்ளது.
வரும் சங்கராந்தியை முன்னிட்டு ஜன., 10ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.