பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தக்குபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா ஆகிய நடித்த பாகுபலி படத்தை ஜப்பானில் ரிலீசிற்கு தயார் நிலையில் உள்ளது. ஜூலை 10ம் தேதி இப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிட பாகுபலி படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தயாரிப்பாளர்களின் முக்கிய சந்தையாக ஜப்பான் விளங்குவதால் 2 அல்லது 3வது கட்டங்களாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் ரிலீசாகும் அதே நாளிலேயே ஜப்பானிலும் பாகுபலி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு முன் ஏக் தா டைகர், ஓம் சாந்தி ஓம், 3 இடியட்ஸ் ஆகிய பாலிவுட் படங்கள் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டன. ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த 3 படங்களும் பாக்ஸ் ஆபிசில் இடம்பிடித்தன. அமீர்கானின் சமீபத்திய சூப்பர்ஹிட் படமான பிகே படமும் விரைவில் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மிக அதிகபட்ச பட்ஜெட்டான ரூ.250 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.