ராஷி கண்ணாவுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி | அப்பா- அம்மாவின் பிடிவாதம் ஏற்படுத்திய பாதிப்பு! - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்! | கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியானது! | அமரன் லுக்கில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த சிவகார்த்திகேயன் | துல்கர் சல்மானுக்கு முதல் ரூ.100 கோடி வசூலை தந்த லக்கி பாஸ்கர் | தமிழில் அடுத்த 'உண்மையான பான் இந்தியா' எப்போது? | மாதுரி தீட்சித் உடன் நடனமாடியது பெருமை - வித்யாபாலன் | 'கங்குவா' போல சில கதைகள் உள்ளன: இயக்குனர் சிவா ஆர்வம் | சினிமா எடிட்டர் உதய சங்கர் காலமானார் | ''குற்ற உணர்வால் எடுத்த முடிவு.. 10 ஆண்டுகளே நடிப்பேன்'': அமீர்கான் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தப்படம் கோல்டன் குளோபல் மற்றும் ஆஸ்கர் விருது போட்டிகளில் கலந்துகொண்டு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதுகளை அள்ளி வந்தது. இதன் மூலம் இன்னும் உலக அரங்கில் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ஜப்பானில் இந்த படத்தை அங்குள்ள ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர்.
சமீபத்தில் மீண்டும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பானில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அப்போதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்வில் இயக்குனர் ராஜமவுலி நேரிலேயே கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து ஜப்பானில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை மேடை இசை நிகழ்ச்சியாக அங்குள்ள 110 வருட பழமை வாய்ந்த தகரசுகா என்கிற நிறுவனம் நடத்தியது.
இந்த நிகழ்விலும் கலந்து கொண்ட ராஜமவுலி, “இது ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்” என்று கூறியதோடு இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்று நடித்த பெண்கள் அனைவரையும் பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.