ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கேஜிஎப் படத்தில் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபல நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். தென்னிந்திய மொழிகளில் ஒவ்வொன்றிலும் இவருக்கும், படத்தில் இவர் பேசும் வசனங்களுக்கும் என தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
இந்த நிலையில் அடுத்ததாக யாருடன் இணைந்து யஷ் படம் பண்ணப்போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகையும், மலையாள இயக்குனருமான கீது மோகன்தாஸ் டைரக்ஷனில் டாக்ஸிக் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இன்னும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் தற்போது இந்த படத்திற்கான லொக்கேஷன் தேடும் பணிகளில் நாயகன் யஷ், இயக்குனர் கீது மோகன்தாஸ் இருவரும் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அப்படி ஒரு லொக்கேஷனை அவர்கள் ஆய்வு செய்தபோது அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.