சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
ஜிந்தகி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிய நடிகை தியா மிர்சா, அடுத்து, வித்யா பாலன் நடிப்பில் பாபி ஜஸோஸ் படத்தை தயாரித்தார். இவ்விரு படங்களும், தியா மிர்சாவிற்கு, வெற்றிப்படங்களாகவே அமைந்தன. தியா மிர்சா, சமீபத்தில், தனது நண்பரான ஷாஹில் ஷங்காவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ரொமான்டிக் காமெடி படத்தை, தியா மிர்சா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாது, தியா மிர்சாவே தயாரிக்கவும் உள்ளார்.