தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் என்ற படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதையடுத்து பி.வாசு இயக்கிய சந்திரமுகி- 2 படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் புதிய படத்தில் கங்கனா கமிட்டாகி இருக்கிறார். மாதவன் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.