பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
அமீர்கான் நடிப்பில் வௌியாகியுள்ள படம் பிகே. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள பி.கே. படத்தில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்திருந்தார். இப்படம் வௌியாவதற்கு முன்பே சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து இப்படத்திற்கு பல்வேறு பிரச்னைகள் எழுந்தது. குறிப்பாக இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாக இப்படத்தில் காட்சிகள் உள்ளதாக வடமாநிலங்களில் பிரச்னை எழுந்தது. மேலும் பல இடங்களில் பிகே படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒருபக்கம் இப்படத்திற்கு பிரச்னை எழுந்தாலும் வசூல் ரீதியாக இப்படம் பெரும் சாதனையை படைத்துள்ளது. இதுநாள் வரை பிகே படம் சுமார் ரூ.276 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில், பிகே படத்திற்கு எழுந்த பிரச்னை போன்றே, இப்போது சல்மானின் பஜ்ரங்கி பகிஜான் படத்திற்கும் சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது இப்படத்தின் கதை லவ்-ஜிகாத்தை வலியுறுத்துவதாக சொல்லி இப்படத்தின் இயக்குநருக்கு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் கபீர்கான் கூறியுள்ளதாவது, குறிப்பிட்ட ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் இப்படம் லவ்-ஜிகாத்தை வலியுறுத்துவதாக நாங்கள் அறிகிறோம், உடனே அதை தடை செய்ய வேண்டும் என்று இ-மெயிலில் மிரட்டல் விடுத்துள்ளனர். நான் எந்த காரணத்தை கொண்டும் கதையில் மாற்றம் செய்யப்போவது கிடையாது, இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று கூறியுள்ளார்.