ஹிந்தி பிக்பாஸில் முதல் தமிழ் போட்டியாளராக நுழைந்த சூர்யாவின் கதாநாயகி | மொட்டைத்தலையுடன் கோலங்கள் ஆனந்தி! என்னாச்சு அவருக்கு? | உங்களால் எனக்கு ஏற்பட்ட ரூ.1 கோடி நஷ்டம் : பிரகாஷ்ராஜை விளாசிய தயாரிப்பாளர் | உலக சாதனை புத்தகத்தில் நடிகர் அஜித்தின் நிறுவனம் | ‛தெறி' பட ஹீந்தி ரீ-மேக்கில் சல்மான் கான் | நவராத்திரி : துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பிரதிபலித்த ஏக்தா ஜெயின் | வெப் சீரியல் இயக்கும் நடிகை ரேவதி! | ஜசரி கணேஷ் பிறந்தநாள் பார்டியில் தனுஷ் : அடுத்த படம் இவருக்குதான் | விஜய்யின் அரசியல் வருகை - நடிகர் கார்த்திக் சொன்ன கருத்து! | ஒரு படம் பிளாப் ஆனால் நடிகை தான் காரணமா? - மாளவிகா மோகனன் ஆதங்கம் |
தெலுங்கு திரையுலகில் ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து, கடந்த பத்து வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஜெகபதி பாபு. குறிப்பாக தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு மோஸ்ட் வான்டெட் வில்லன் என்றால் டிக் செய்யப்படுவதில் முதல் ஆளாக இவர் இருக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட்டிலும் நுழைந்து சல்மான்கானுடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் வில்லனாக நடித்த இவர் மீண்டும் சல்மான் கானுடன் இணைந்து இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல இளம் நடிகர் ஆயுஷ் சர்மாவுடன் இணைந்து ருஸ்லான் என்கிற படத்திலும் நடித்துள்ளார் ஜெகபதி பாபு. சல்மான்கானுடன் இணைந்து நடிக்கும் போது ஜெகபதி பாபுவிடம் பேசிய சல்மான் கான், “உங்களது நடிப்பு திறமை மிகப்பெரியது. பெரிய நிறுவனங்கள் என்று பார்க்காமல் நல்ல கதை அம்சம் கொண்ட, நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடியுங்கள்” என்று கூறினாராம்.
இந்த ருஸ்லான் படத்திற்கு முன்பாக அவர் அப்படி சொன்ன அறிவுரையை பின்பற்றி தான் இந்த படத்திலே நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஜெகபதி பாபு.