தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த, என்டிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், என்டிஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடுவைப் பற்றிப் பேசும்போது, 1996களிலேயே ஐதராபாத் நகரை ஐ.டி துறை நகரமாக சந்திரபாபு நாயுடு மாற்றியதைப் பற்றியும், விஷன் 2047 மூலம் ஆந்திராவை முன்னேற்றுவார் என்றும் பாராட்டிப் பேசினார் ரஜினிகாந்த்.
அது தற்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த முன்னாள் நடிகையும், ஆந்திராவின் அமைச்சருமான ரோஜா உட்பட பலரும் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் ரஜினிகாந்தைப் பற்றி தரக் குறைவாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் 'ராமபானம்' என்ற தெலுங்குப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சீனியர் தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவிடம் இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெகபதிபாபு, “எப்போது பேசினாலும் ரஜினிகாந்த் சிறப்பாகப் பேசுவார். அதைவிட முக்கியம் அவர் எப்போதும் உண்மையே பேசுவார். ரஜினி பேசியது நூற்றுக்கு நூறு சரி,” என்று பதிலளித்தார்.
இந்த விவகாரத்தில் தெலுங்குத் திரையுலகினர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக பேச முன்வராத நிலையில், ஜெகபதி பாபு பேசியிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், ஒய்எஸ்ஆர் கட்சியினருக்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.