காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் | பாலிவுட்டில் வசூலைக் குவிக்கும் 'சாயரா' | 'நாட்டு நாட்டு' பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு | நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் பவன் கல்யாண் | பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு |
தங்கலான் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கி வரும் படம் வேட்டுவம். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது அதில் நடித்த ஸ்டன்ட் மேன் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். ரிஸ்க்கான சண்டைக் காட்சியில் நடித்தபோது இது நிகழ்ந்துள்ளது. அதையடுத்து அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட மூன்று பேர் மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு அருமையான விஷயத்தை செய்துள்ளார். அது என்னவென்றால், நாடு முழுவதும் உள்ள 650 ஸ்டன்ட் நடிகர்களுக்கு அவர் இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து சினிமா வட்டாரங்களில் இருந்து நடிகர் அக்ஷய் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.