தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் |
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‛காந்தாரா' படம், 2022 செப்டம்பரில் ரிலீஸ் ஆனது. படத்தின் கதை, காட்சியமைப்பு, நடிப்பு, இசை மற்றும் கருவுக்காக அந்த படம் பெரிய ஹிட்டானது. 14 கோடியில் தயாரிக்கப்பட்ட படம், 400 கோடி வரை வசூலித்தது. உலகம் முழுக்க காந்தாராவுக்கு ரசிகர்கள் கிடைத்தன. 2 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றது. அடுத்த பாகமாக காந்தாரா 2 உருவானது. கேஜிஎப் படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் மீண்டும் அடுத்த பாகத்தையும் தயாரிக்கிறது.
காந்தாரா தி லெஜண்ட், சேப்டர் 2 என அதற்கு தலைப்பு வைக்கப்பட்டது. அடுத்த பாகமாக வந்தாலும், கதைப்படி காந்தாரா கதைக்கு முந்தைய நிகழ்வாக, இந்த பாகம் உருவானது. அக்டோபர் 2ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவடைந்தது என்று ஒரு மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதில் கனவுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நம் ஊர், நம்ம மக்கள், நம்ம நம்பிக்கை, என் முதுகெலும்பாக தயாரிப்பாளர், என் குழு இருக்கிறார்கள். இது சாதாரண படம் அல்ல, 250 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இது ஒரு சக்தி, தெய்வத்துக்கு நன்றி. காந்தாரா உலகத்துக்கு உங்களை வரவேற்கிறேன்' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
காந்தாரா 2 மேக்கிங் வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=aopemV_lclI