அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் 2022 வெளிவந்த 'காந்தாரா' படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'பிரிகுவல்' ஆக 'காந்தாரா - சாப்டர் 1' என எடுத்து வருகிறார்கள்.
அதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் கவிகுட்டா பகுதியில் உள்ள ஹெரூர் என்ற கிராமத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது வெடிப்பொருட்களைப் பயன்படுத்தியதில் படக்குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பல காட்டு விலங்குகள் அந்தப் பகுதியில் இருப்பதால் வெடி வெடித்து படப்பிடிப்பு நடத்துவது அவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படக்குழுவினர் அங்குள்ள காட்டு மரங்களை வெட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி இருக்கிறார். மேலும் கிராம இளைஞர் ஒருவரையும் படப்பிடிப்புக் குழுவினர் தாக்கி உள்ளனர்.
இதையடுத்து கிராம மக்கள் படக்குழுவினர் மீது கடுமையாக கோபமடைந்துள்ளனர். படப்பிடிப்பை வேறு இடத்தில் நடத்தச் சொல்லியுள்ளனர். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து எசலூர் காவல் நிலையத்தினர், உள்ளூர் மக்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேவைப்பட்டால் கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுப்போம் என தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சக்லேஷ்பூர் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு செட் பொருட்களை கொட்டியதற்காக கர்நாடக வனத்துறையினர் படக்குழுவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.