அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தெலுங்குத் திரையுலகத்தில் சமீப வருடங்களில் 500 கோடி, 1000 கோடி வசூல் என்பது பரபரப்பாக உள்ளது. கடந்த வருடம் வெளியான 'புஷ்பா 2' படம் 1800 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், மற்றும் சமீபத்தில் 400 கோடி பட்ஜெட்டில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படத்தைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
அதன் தயாரிப்பாளர்கள், நிறுவனத்தின் முக்கிய தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளிவந்த தெலுங்குப் படங்கள் அனைத்துமே 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததை பரபரப்பாகப் பேசி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாரா ஹில்ஸ், ஜுபிளி ஹில்ஸ், கொன்டாபுர், கச்சிபவுலி ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய புள்ளி இவர். தற்போது தெலங்கானா திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.