சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சென்னையில் நடந்த ‛பிளாக் மெயில்' பட விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் அமல்ராஜ், ''ஹீரோ ஜி.வி.பிரகாஷிற்கு மிக்க நன்றி. இந்த படம் ஒரு கட்டத்தில் நகராமல் இருந்தது. இன்னும் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மட்டுமே படத்தை முடிக்க முடியும் என்ற நிலை. நான் ஹீரோவிடம் பேசினேன், என் நிலைமையை சொன்னேன். அவர் பாதி சம்பளம் மட்டுமே வாங்கிய நிலையில், மறுப்பு எதுவும் சொல்லாமல் மீண்டும் படத்தில் நடிக்க வந்தார். மீதி சம்பளத்தை விரைவில் கொடுத்து விடுவேன்' என்று வெளிப்படையாக பேசினார்.
அடுத்து பேசிய இயக்குனர் வசந்தபாலன், 'நான்தான் வெயில் படத்தின் மூலம் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தேன். அன்று முதல் இன்று வரை அப்படியே இருக்கிறார். நான் இயக்கிய 2 படத்துக்கு கூட அவர் சம்பளம் வாங்கவில்லை. பட நிலைமையை சொன்னபோது, மானேஜரிடம் பேசுகிறேன், டைம் கொடுங்கள் என்று கூட சொல்லவில்லை. டக்கென சம்பளத்தை விட்டுக் கொடுக்க முடிவெடுத்தார்'' என்றார்.
இந்த பேச்சை கேட்டவர்கள், இதே பாலிசியை மற்ற தயாரிப்பாளர்களுக்கும் கடைபிடித்தால், ஜி.வி.பிரகாஷ் ஒவ்வொரு ஆண்டும் பலகோடி சம்பளத்தை இழக்க நேரிடும் என்று கமென்ட் அடித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு படவிழாவில் பேசிய தயாரிப்பாளர் தேனப்பன். 'சமீபத்தில் வெளியான ஒரு பெரிய பட்ஜெட் படம் பைனான்ஸ் பிரச்னையில் தவித்தபோது, என்னால் அந்த படம் நிற்க வேண்டாம் என சொல்லி, தனது பெரிய சம்பவளத்தை ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்தார்' என பேசியிருந்தார்.
சம்பள விஷயத்தில் அவர் மாமா, ஏ.ஆர்.ரஹ்மான் கறார். ஆனால், நண்பர்கள், நல்ல படம், தயாரிப்பாளர்களின் நிலை, இயக்குனரின் எதிர்காலம், படம் ரிலீஸ் ஆக வேண்டிய நிலை போன்ற காரணங்களாக, தனது சம்பளத்தை தயங்காமல் விட்டுக் கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் தயாரிப்பாளர் என்பதால் இந்த முடிவுகளை யோசிக்காமல் எடுப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.




