இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஒரே படம், ஓஹோனு வாழ்க்கை என ஜெயித்தவர் கயாடு லோஹர். டிராகன் படத்தில் வெற்றியும், அவரின் பாடல்காட்சி, அவர் வெளியிட்ட இன்ஸ்டா ரீல்களும் அவரை தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் கொண்டு போய் சேர்த்தது. ஒரு படத்திலாவது அந்த கயாடுவுடன் டூயட் பாட வேண்டும் என்று பல இளம், நடுத்தர வயது ஹீரோக்கள் துடித்தார்கள்.
சிம்புவுடன் ஒரு படம், தனுசுடன் ஒரு படம் என அவரும் பிஸியானார். ஆனால், யார் கண் பட்டதோ, தமிழகத்தில் நடந்த சினிமா துறையினர் மீதான அமலாக்கத்துறை ரெய்டு, அதை தொடர்ந்து வெளியான பார்ட்டி செய்திகள், கயாடு 35 லட்சம் மதிப்புள்ள பேக்கை பரிசாக பெற்றார் என கிளம்பிய செய்திகள், அவருக்கு நெகட்டிவ் ஆக அமைந்தன.
அதனால், கயாடுக்கு ஏகப்பட்ட கெட்ட பெயர். அவர் குறித்து விசாரித்தால், இப்போது சென்னையில் நேரத்தை செலவழிக்கவே அவருக்கு மனமில்லை. ஐதராபாத், கேரளாவில் இருக்கிறாராம். தமிழ் சினிமா, தமிழ் ரசிகர்கள் தன்னை புறக்கணிப்பதாக பீல் பண்ணுகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
உண்மையில் அப்படிப்பட்ட காஸ்ட்லி பேக்கை அவர் பரிசாக பெற்றாரா? இல்லையா என்பதை அவர் வாய் திறந்து சொன்னால்தான், அவர் வாய்ப்புகளுக்கு கதவு திறக்கும் என்றும் கூறப்படுகிறது.