‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் | பாலிவுட்டில் வசூலைக் குவிக்கும் 'சாயரா' |
பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், மோகித் சூரி இயக்கத்தில் அஹான் பான்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஹிந்திப் படமான 'சாயரா' கடந்த வாரம் ஜுலை 18ம் தேதி வெளியானது. அப்படம் கடந்த மூன்று நாட்களில் 75 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. அறிமுக நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாயகன், நாயகி என இருவருமே புதுமுகங்கள் நடித்து ஒரு ஹிந்திப் படம் முதல் முறையாக இவ்வளவு வசூலைக் குவித்துள்ளது. பாலிவுட் நடிகரான சங்கி பாண்டேயின் சகோதரர் சிக்கி பாண்டேயின் மகன் அஹான் பான்டே. இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு அவர் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். நாயகியான அனீத் பட்டா மாடலிங்கிலிருந்து சினிமாவுக்கு வந்துள்ளார். நல்ல பாடகியும் கூட.
இப்படத்தை இயக்கிய மோகித் சூரி இதற்கு முன்பு இயக்கிய படங்களில் 'ஆஷிக் 2, ஏக் வில்லன்' ஆகிய படங்கள் பெரிய வசூலைக் குவித்த படங்கள்.