மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

பாலிவுட் நடிகர் சோனு சூட் ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் இவர் பொது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தார். அதன் காரணமாகவே இவரை பல மாநிலங்களில் உள்ள மக்கள் ரியல் ஹீரோவாக கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் மும்பையில் அமைந்துள்ள நடிகர் சோனு சூட்டின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருக்கிறது. அதையடுத்து பாம்பு பிடி வீரர்களுக்கு கால் செய்து அந்த பாம்பை பிடிக்காமல், தானே துணிச்சலுடன் அந்த பாம்பை ஓடிச் சென்று பிடித்து அதை ஒரு கோணிப்பைக்குள் போட்டுள்ளார் சோனு சூட். இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்து சோனு சூட்டின் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.