தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' |

ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் கிங் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சி மும்பையில் உள்ள கோல்டன் டெப்பாகோ ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அப்போது ஸ்டன்ட் நடிகர்களுடன் ஷாரூக்கான் ஆக்ஷன் கட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு எதிர்பாராதவிதமாக லேசான அடிபட்டது. இதனால் கிங் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அவரை ஒரு மாத காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளார்கள். மேலும் மேல் சிகிச்சைக்காக ஷாருக்கானை அமெரிக்காவிற்கு அழைத்து செல்கிறார்கள். அதனால் கிங் படத்தின் படப்பிடிப்பு அடுத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் தொடங்கும் என்கிறார்கள். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் ஷாரூக்கானுடன் சுஹானா கான், அபிஷேக் பச்சன், அபய் வர்மா உள்ளிட்ட பல நடிக்கிறார்கள். இந்த படம் 2026 ஆம் ஆண்டு மே மாதம் திரைக்கு வருகிறது.