அமெரிக்க வசூலில் சாதனை படைத்த டாப் 10 படங்கள் | எனது வாழ்க்கையை வடிவமைத்த அம்மா - ஹேமமாலினி நெகிழ்ச்சி | 'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் | விடாமுயற்சி - டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சி |
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் புஷ்பா-2 படம் வெளியானபோது ஆந்திராவில் உள்ள சந்தியா திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதன் காரணமாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனை கடுமையாக விமர்சித்ததோடு, தெலுங்கானாவில் நான் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த படங்களுக்கும் ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வந்துள்ளார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
இப்படியான நிலையில், 2025ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியாக உள்ள ராம் சரணின் கேம் சேஞ்சர், பாலகிருஷ்ணாவின் டக்கு மகாராஜ், வெங்கடேஷின் சங்கராந்திகி வஸ்துனம் போன்ற படங்களின் ஸ்பெஷல் ஷோக்களை திரையிடுவதற்கு ஆந்திரா அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதோடு இந்த மூன்று படங்களின் டிக்கெட் விலையும் உயர்த்தப்பட உள்ளதாம்.