பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு ஜனவரி 10ம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தைத் தமிழிலும் நேரடி படம் போல வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
நாளை ஜனவரி 4ம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பான விழா நடக்க உள்ளது. அதில் சிரஞ்சீவி குடும்பத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. ஆந்திர துணை முதல்வரும் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் என நேற்றே அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார்கள்.
ஜனவரி 7ம் தேதி சென்னையில் இப்படத்திற்கான விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விழா நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள நடிகர் விஜய்யைக் கேட்டிருக்கிறார்களாம். அவரும் வர சம்மதித்துவிட்டதாகத் தெரிகிறது.
விஜய் நடித்து வெளிவந்த 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ள திரைப்படம்தான் 'கேம் சேஞ்சர்'. அதனால், விஜய் நிச்சயம் கலந்து கொள்வார் என்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் விஜய் 'நண்பன்' படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்ல விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரனின் உதவி இயக்குனராக இருந்தவர்தான் ஷங்கர்.
'இந்தியன் 2' படம் சரியாகப் போகாத காரணத்தால் இந்த சமயத்தில் விஜய்யின் உதவி தேவைப்படுகிறது. நேற்று ஹைதராபாத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட இயக்குனர் ராஜமவுலி கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.