குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
இந்தியத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் வெளியாவதில் முக்கிய நாடாக இருப்பதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. மற்ற நாடுகளை விடவும் அங்குதான் அதிக வசூல் கிடைக்கிறது. அந்த அளவிற்கு அதிக அளவிலான இந்தியர்கள் அங்கு வசிப்பதே அதற்குக் காரணம்.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'சிவாஜி' படம்தான் அங்கு நல்ல வசூலை ஆரம்பித்து வைத்தது. அதன் பிறகே பல தென்னிந்திய படங்கள் அந்த வழியைப் பின்பற்றி வருகின்றன. அங்கு பல ஹிந்திப் படங்கள் வெளியானாலும் தென்னிந்தியப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும் வசூலும் தனிதான்.
அமெரிக்காவில் இதுவரையில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் 22 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து 'பாகுபலி 2' படம்தான் முதலிடத்தில் இருக்கிறது. கல்கி 2898 ஏடி படம் 18 மில்லியன், பதான் படம் 17 மில்லியன், ஆர்ஆர்ஆர் 15.34 மில்லியன், ஜவான் 15.23 மில்லியன், புஷ்பா 2 - 15.08 மில்லியன், அனிமல் 15.01 மில்லியன், டங்கல் 12.39 மில்லியன், பத்மாவத் 12.17 மில்லியன், பிகே 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்று டாப் 10 இடங்களில் உள்ளன. இவற்றில் தற்போதும் ஓடிக் கொண்டிருக்கும் 'புஷ்பா 2' படம் மேலும் வசூலைக் குவித்து சில இடங்கள் முன்னேறலாம்.