மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
மலையாள திரையுலகில் பிரபல இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் உன்னி முகுந்தன். மலையாளத்தை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் சசிகுமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் உன்னி முகுந்தன். தொடர்ந்து பட தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவரிடம் மேனேஜராக பணியாற்றிய விபின் குமார் என்பவர் உன்னி முகுந்தன் தன்னை அடித்ததாகவும் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் காவல்துறையில் புகார் அளித்தார். சமீபத்தில் வெளியான நரிவேட்ட படத்தை பாராட்டி, தான் வெளியிட்ட முகநூல் பதிவுக்காக தன்னை இவ்வாறு அவர் செய்ததாகவும் அப்படி வேறு எந்த படங்களை பற்றி உயர்வாக புகழ்ந்து கூறினால் அவருக்கு பிடிக்காது என்றும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் விபின் குமார்,
ஆனால் உன்னி முகுந்தனோ விபின் குமார் தனது மேனேஜரே அல்ல, கடந்த சில மாதங்களாகவே தன்னைப் பற்றி திரையுலகில் தேவையில்லாமல் தவறான செய்திகளை பரப்பி வருகிறார் என்றும் அவை குறித்து கண்டித்ததால் இப்படி தன்மீது அவர் ஒரு செய்தி பரப்பி உள்ளார் என்றும் கூறினார். மேலும் விபின் குமார் தரப்பில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரும் காவல்துறையில் ஒரு புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் மலையாள திரையுலக தொழிலாளர் சம்மேளன (பெப்கா) தலைவரும் பிரபல இயக்குனருமான உன்னிகிருஷ்ணன் இந்த பிரச்சனையில் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து ஒரு சமாதான உடன்பாடு ஏற்படுத்தி வைத்துள்ளாராம். இவர்களது பிரச்சனை குறித்து பெப்காவுக்கு இரு தரப்பிலிருந்து யாரும் புகார் கொடுக்கவில்லை என்றாலும் கூட இந்த விஷயத்தை பெரிதுபடுத்த விடாமல் இரு தரப்பையும் தாங்களே அழைத்து இந்த சமரச முயற்சியை மேற்கொண்டுள்ளதாம் பெப்கா.