சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
இந்த வருடம் ஒரு பக்கம் மோகன்லால் நடிப்பில் நேரடி படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, அவையும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில் மோகன்லாலின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான ஆன ஸ்படிகம், தேவதூதன், மணிசித்திரதாழ், மற்றும் சோட்டா மும்பை என நான்கு படங்கள் இந்த வருடத்தில் ஏற்கனவே ரீ ரிலீஸ் ஆகி வரவேற்பு பெற்றன.
அடுத்து 2001ல் மோகன்லால் இரட்டை வேடங்களில் நடித்த ராவண பிரபு திரைப்படம் 4கே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. அக்., 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்று தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார். வசுந்தரா தாஸ் இதில் கதாநாயகியாக நடிக்க, நெப்போலியன் வில்லனாக நடித்தார். இந்த ராவண பிரபு திரைப்படம் கூட 1993ல் மோகன்லால், ஐவி சசி கூட்டணியில் உருவான தேவாசுரம் என்கிற படத்தின் சீக்வல் ஆக வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.