நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை : அல்லு அர்ஜுன் எடுத்த முடிவு | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர் | ஹிந்தியில் 800 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்த 'புஷ்பா 2' | என் சினிமா வாழ்க்கையில் இதுவே முதல் முறை - மீனாட்சி சவுத்ரி | தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட மனிதர் அஜித் - நடன இயக்குனர் கல்யாண் | யுவன் சங்கர் ராஜாவை புகழும் சிவகார்த்திகேயன் | மீண்டும் வீர தீர சூரன் படத்திற்கு சிக்கலாக நிற்கும் விடாமுயற்சி | பொங்கல் வெளியீட்டில் பின் வாங்கிய படங்கள் | சினிமா காதலி : சந்தோஷத்தில் சபிதா | மார்கோ 2வில் வில்லனாக விக்ரம்? |
தமிழ் சினிமாவில் பல வித திறமைகளைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். நடிப்பது மட்டுமல்லாமல் இசையமைப்பது, பாடல் எழுதுவது, பாடுவது என பல விஷயங்களை அறிந்தவர். 18 வருடங்களுக்கு முன்பே 'வல்லவன்' படத்தையும் இயக்கிவிட்டார். ஆனால், வேறு சில நடிகர்களுக்குக் கிடைக்கும் சிறந்த வாய்ப்பும், பிரபலமும், விளம்பரமும் அவருக்குக் கிடைக்கவில்லை.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்புவின் 48வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த வருடம் பிப்ரவரி 3ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதோடு படம் பற்றிய அடுத்த அப்டேட் எதுவும் வரவில்லை. அப்படத் தயாரிப்பிலிருந்து கமல் பின் வாங்கிவிட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் அப்படத்தின் இயக்குனர். அதன்பின் புதிய தயாரிப்பாளரை சிம்புவும், தேசிங்குவும் சேர்ந்தே தேடி வருகிறார்களாம். சரித்திரக் கதை என்பதால் படத்தின் பட்ஜெட்டும் அதிகம். அதனால்தான் கமல் விலகியதாக ஒரு தகவல்.
இதனிடையே சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தேசிங்கு பெரியசாமி நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதை மறுபதிவு செய்து, “உண்மையில் மதிப்புள்ளதை நேரம் சோதிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் கிடைக்க தாமதமாவது குறித்துத்தான் சிம்பு அப்படி பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது.