கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' |
சமீப காலமாகவே தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் கூட பல வருடங்களுக்கு முன்பு ஹிட்டான படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுவதும் அதற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல படங்கள் தாங்கள் ரிலீஸான சமயத்தை விட தற்போது நல்ல வசூலையும் அள்ளுகின்றன. அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லால் படங்கள் தான் அடிக்கடி ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. கடந்த வருடம் மோகன்லாலின் ஸ்படிகம், மணிசித்திரதாழ், பிரணயம் ஆகிய படங்களின் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. தற்போது மோகன்லால் நடிப்பில் வெளியான உதயநாணுதாரம் படமும் 4K முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது.
கடந்த 2005 ஜனவரி 21ம் தேதி வெளியான இந்த படம் தற்போது இருபதாம் வருடத்தை தொடுகிறது. அதை கொண்டாடும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் இந்தப் படத்தை அதன் தயாரிப்பாளரே ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடிகர் சீனிவாசன் நடித்திருந்தார். கதாநாயகியாக மீனா மற்றும் பாவனா ஆகியோர் நடித்திருந்தனர். '36 வயதினிலே' புகழ் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இயக்கியிருந்தார். இந்த படம் தான் பின்னர் தமிழில் பிரித்விராஜ், கோபிகா நடிக்க வெள்ளித்திரை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. வரும் ஜனவரி 30ம் தேதி மோகன்லால், ஷோபனா நடித்துள்ள 'தொடரும்' திரைப்படம் வெளியாவதால் இந்த படத்தின் ரீ ரிலீஸை பிப்ரவரியில் வைத்துள்ளார்கள்.