சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து திடீரென விலகியது. அது அஜித் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புத்தாண்டுக்கு முன்பாக அப்படி ஒரு அறிவிப்பு வரும் என அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
அறிவிப்பு வந்ததிலிருந்து படக்குழு மீது அஜித் ரசிகர்கள் தங்களது கடும் கோபத்தை சமூக வலைதளங்களில் காட்டி வருகிறார்கள். அஜித் போன்ற முன்னணி நடிகரின் படத்தின் வெளியீடு பற்றி அறிவித்துவிட்டு, இப்படி பின்வாங்குவதா என விமர்சனம் செய்தார்கள்.
இதனிடையே, கோபமாக உள்ள அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக 'விடாமுயற்சி' டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. டிரைலர் வேலைகளை முடித்து அதற்கு சென்சார் சான்றிதழையும் வாங்கிவிட்டார்களாம். 2 நிமிடம் 24 வினாடிகள் உள்ள அந்த டிரைலரின் வெளியீட்டுத் தேதி பற்றி விரைவில் அறிவிப்பு வரலாம்.