அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழில் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் இந்த நடிகை. இடையில் சில குடும்பப் பிரச்சினையால் தமிழில் நடிப்பதை தவிர்த்தார். தெலுங்கில் பிஸியானார். சமீபகாலமாக மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் எதிர்பார்த்த முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லை.
இந்நிலையில் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க அவரை படக்குழுவினர் அணுகியுள்ளனர். முதலில் தயங்கியவர் பின்னர் நம்பர் நடிகையே இது போன்ற கேர்க்டர்களில் நடித்துள்ளார் என்பதால் ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் சம்பளம் மட்டும் பெரிய தொகையாகக் கேட்டுள்ளார்.
பட வாய்ப்புகளே இல்லாத போதும் இப்படி பந்தா காட்டுகிறாரே என நொந்து போன படக்குழு, படத்தின் பட்ஜெட்டே கம்மி தான் என்று சொல்லி, சம்பளத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டுள்ளனர். கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனசில்லாத நடிகையும், வேறு வழியில்லாமல் இறங்கி வந்து, அந்த சம்பளத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம்.