புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
ஆங்கிலம் மற்றும் கொரியன் படங்களை பார்த்து காப்பி அடித்து படம் எடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தற்போது பேஸ்புக், டுவிட்டர் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இருப்பதால் உலகின் எந்த மூலையில் உள்ள சினிமாவை பார்த்து காப்பியை கண்டுபிடித்து எடுத்தாலும் ஆதாரத்தோடு காட்டி கழுவி கழுவி ஊற்றிவிடுவார்கள். 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட சில படங்களை பார்க்கலாம்.
அனுமதி பெற்று காப்பி அடித்தால் ரீமேக். அனுமதி பெறாமல் காப்பி அடித்தால் அது அசல் காப்பி என்பதை நினைவில் கொள்க.
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. பீமேல் 22 கோட்டையம் என்ற படம், மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீப்ரியா இயக்கினார்.
சாப்பாகுரிச் என்ற மலையாளப்படம் புலிவால் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை மாரிமுத்து இயக்கினார்.
சால்ட் அண்ட் பெப்பர் என்ற படம் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரிமேக் ஆனது. பிரகாஷ்ராஜ் இயக்கினார்.
காக்டெயில் என்ற படம் அதிதி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பரதன் இயக்கினார்.
கவுதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ தெலுங்கு ரீமேக் படம். தெலுங்கு மரியாதை ராமண்ணா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. சந்தானம் ஹீரோவாக நடித்தார்.
இந்தியில் வெளிவந்த கஹானி படம், நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் ரீமேக் ஆனது. நயன்தாரா நடித்திருந்தார். இதே படம் அனாமிகா என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. சேகர் காமுலா இயக்கி இருந்தார்.
நானி நடித்த ஆஹா கல்யாணம் படம் இந்தி படத்தின் ரீமேக். ஸ்ரேயா நடித்த சந்த்ரா படம் கன்னட பட ரீமேக்.
அக்ராஸ் தி ஹால் என்ற ஹாலிவுட படத்தை அப்படியே காப்பிடி அடித்து நேர் எதிர், கபடம் என்ற இரண்டு படத்தை எடுத்தார்கள். மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் காட்சிகளை கொண்டு யான் படத்தை ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் எடுத்திருந்தார்.
சூர்யா நடித்த அஞ்சான் படம் பாட்ஷாவையும். ஹரி இயக்கிய பூஜை படம் ஹரியின் முந்தைய படங்களிலிருந்தே காப்பி அடிக்கப்பட்டது.
தற்போது மலையாள த்ரிஷ்யம், பாபாநாசமாகவும், கன்னட லூசியா எனக்குள் ஒருவனாகவும், மலையாள உஸ்தாக் ஓட்டல் தலப்பாகட்டியாகவும் தயாராகிக் கொண்டிருக்கிறது. மலையாள பெங்களூர் டேய்ஸ் விரைவிலும் ரீமெக் ஆக இருக்கிறது.
கத்தி படத்தின் கதைக்கும், லிங்கா படத்தின் கதைக்கும் நிறைய பேர் உரிமை கொண்டாடினார்கள்.
2014ல் வந்த நேரடி ரீமேக் படமாக இருந்தாலும் சரி, காப்பி அடித்த படமாக இருந்தாலும் சரி, எந்த படமுமே வெற்றிபெறவில்லை. இயக்குனர்களின் சொந்த கற்பனையில் உருவான படங்களே வெற்றி பெற்றிருக்கிறது.