எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா |
நடிகர் பப்லு பிருத்விராஜ் பீனா என்ற பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர், கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னைவிட முப்பது வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்திருந்தார். இருவரும் பொது இடங்களுக்கு ஜாலியாக சுற்றித்திரிந்த புகைப்படங்களும் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது பப்லு - ஷீத்தல் உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து சோசியல் மீடியாவில் ஷீத்தலிடம் ஒரு ரசிகர், நீங்கள் பப்லுவை பிரிந்து விட்டீர்களா என்று கேள்வி கேட்டபோது, அந்த கேள்வியை லைக் செய்து இருந்தார். இந்நிலையில் தற்போது பப்லு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்றுக் கொண்டேன். என்னுடைய பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க தவறி விட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.